பாலை மலர் - 7, 'விண்ணும்-நிலவும்!'



அரபு நாட்டு  பெண்கள் திருவிழாக் காலங்களில் ஆண்களுக்கு சரிநிகர் சமமாய் வேடிக்கையும், விளையாட்டுமாய் வெட்கமின்றி திரிவார்கள். குறைவின்றி வாலிபர்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவார்கள். ஆனால், ஆமினாவின் இயற்கையான சுவாபம் அரபு பெண்களை விட்டு மாறுபட்டு இருந்தது. மூத்தப் பெண்களிடம் பேசுவதென்றாலே அவருக்கு வெட்கத்தில் முகம் அந்திநேரத்து சூரியனின் செம்மைப் போல படர்ந்து விடும். பார்ப்பதற்கு ஊமைப் பெண்ணைப் போல அவர் இருப்பார்.

ஜோடிப் பொருத்தம் இறைநாட்டத்தால்.. அருமையாக அமைந்தது.அரபுகளின் பூர்வீக முறைப்படி, திருமண சடங்குகளும் இனிதே முடிந்தன. விண்ணில் நிலவாய் அப்துல்லாஹ்வும்-ஆமினாவும் திகழ்ந்தார்கள். அவர்களின் திருமணப் பொருத்தத்தை எண்ணி மக்கா நகரமே மகிந்தது.

அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ்வையும், மற்ற மகன்களையும் அழைத்துக் கொண்டு கஅபாவுக்கு 'தவாஃப்-வலம்' வரச் சென்றார். எத்தனையோ முறை அவர் அப்புனிததலத்துக்கு வலம் வந்துள்ளார். அப்போதெல்லாம் கிடைக்காத மனநிம்மதியும், இன்பமும் தற்போது அவருக்கு கிடைத்தது.

கஅபாவின் கோபுரங்களில் எண்ணற்ற மாட புறாக்கள் பல நிறங்களில், அழகழகாக இருந்தன. அப்துல் முத்தலிப் குடும்பத்தைக் கண்டு அவை பறந்ததது.. புறாக்களும் அவர்களோடு தவாஃப் செய்வது போலிருந்தது. "நாங்களும் உங்கள் இன்பத்தில் பங்கெடுத்து திளைக்கிறோம் பாருங்கள்!" - என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது. 

அப்துல் முத்தலிப்பின் வீட்டில் பயண ஏற்பாடுகள் விரைந்து நடந்து கொண்டிருந்தன. ஒட்டகங்களின் முதுகுகளில் கூடாரங்கள் சுருட்டிக் கட்டப்பட்டன. பாலை நில கொள்ளையரிடமிருந்து தற்காததுக் கொள்ள வாட்களோடு, அம்பாரா கூட்டில் நிறைய அம்புகளும் நிரப்பப்பட்டன. 

அது நீண்ட பயணம்! அயல்நாட்டுப் பயணம்!

பயண ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்தன. புறப்படும் தருணம்.

"ஓ! அப்துல் முத்தலிபின் மகனே! மதீனாவிலிருந்து சற்றுத் தொலைவில் 'உஹதுரலிஸ்தான்' பகுதி வருகிறது. அது மிகவும் அபாயகரமான இடம். அங்கே கொள்ளைக் கூட்டத்தினர் மிகுந்துள்ளனர். அதிலும், 'கப்பார்' கொள்ளைக் கூட்டத்தினர் புரியும் கொடுமைகள் வார்த்தைகளில் வடிக்க இயலாது. அவர்களின் வன்முறைக்கும் அளவேயில்லை. ஜாக்கிரத்தை!"- என்று வழி அனுப்ப வந்தவரின் எச்சரிக்கைக் குரல் அச்சுறுத்தியது. 

அதைக் கேட்டதும் அப்துல்லாஹ் தமது இடது கையை வாளின் கைப்பிடியில் உறுதியாக வைத்து நிமர்ந்து நின்றார். 



"அச்சமில்லை..அச்சமில்லை.. 
வாளிருக்க அச்சமில்லை! 
அச்சமில்லை.. அச்சமில்லை.. 
நெஞ்சு நிறைய உரமிருக்க அச்சமில்லை..!!" 

- என்று சொல்வதைப் போலிருந்தது அவரது தோற்றம். 


காஸிம் குடும்பத்தினர் மனவலிமையில் என்றும் குறைந்தவரில்லை. வீரத்தில் சோடைப் போனவரும் இல்லை. சாதாரணமாக எத்தகைய சூழலும் அவர்களை அச்சுறுத்திட முடியாது. அவர்களின் நெஞ்சுரம் அசாத்தியமானது. இதை வரலாறுகள் நிரூபித்துள்ளன. 

பல முறை.. ஆம்..! பல முறை கஅபாவுக்கு வந்த ஆபத்துகள் கொஞ்சம் நஞ்சமா? அதை எல்லாம் அவர்கள் வாள் முனையில் புறமுதுகிடச் செய்தனர். 

காலம் மலைத்து நின்றது அவர்களின வீரத்தைக் கண்டு!

-- பூக்கும்.

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 4326725930431189261

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress