பாலை மலர் - இதழ் -6, விண்ணில் கலந்த நிலவு!



அப்துல் மனாபின் வீட்டிற்கு வேட்டைக்கறி  வந்திருந்தது. 

பெரிய அண்டாவை அடுப்பில் வைத்து விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

சமையல்காரப் பெண் ஒருத்தி சாப்பாட்டைக் கிளறி கொண்டிருந்தாள். 

கமகமக்கும் விருந்துண்ண விருந்தினர் காத்திருந்தனர். 

பெரிய மண் ஜாடிகளில் தண்ணீர் நிரம்பியிருந்தது. 

"அப்துல் முத்தலிப்பிற்கு என்ன பதில் சொல்லி அனுப்பினீர்?" - நடுத்தர வயது அரபி கேட்டார்.

"எனக்கு அவருடைய சம்பந்தம் மிகவும் பிடித்துவிட்டது. ஓரிரு நாளில் என் சிற்றப்பா நக்லாலிருந்து திரும்பிவந்துவிடுவார். அவருடன் கலந்து பேச வேண்டும். அதன்பின்தான் எல்லாம்!" - முதியவர் பதில் சொன்னார்.

"சீக்கிரம் முடியட்டும். நல்ல காரியங்கள் எவ்பொழுதும் தாமதப்படுத்தக் கூடாது! அப்துல் முத்தலிப் மகன் அப்துல்லாஹ்விற்கு மக்காவில் பெண்களுக்கு குறைவா என்ன? அவருக்குப் பெண் தர நீ நான் என்றல்லவா போட்டிப் போடுகிறார்கள்! சும்மாதானா? அப்துல்லாஹ் போன்ற இளைஞர் மக்காவில் வலைப்போட்டுத் தேடினாலும் கிடைக்கமாட்டாரே! சொக்கத் தங்கமாச்சே!"

 "அவருடைய குடும்பமும் சாதாரண குடுமபமல்லவே! உயர் குலத்தின் வாரிசல்லவா அவர்?"

"மண்ணோடு மண்ணாய் மூடிக் கிடந்த 'ஜம்.. ஜம்..' கிணற்றைக் கண்டுபிடித்து மக்காவின் தாகத்தை தணித்த பரம்பரையைச் சேர்ந்தவராயிற்றே!"

"அதனால், தயங்காமல் சீக்கிரமாய் ஆமினாவின் திருமண ஒப்பந்தத்திற்கு நாள் குறித்து விடுங்கள்!"

அப்துல்லாஹ்விற்கும்-ஆமினாவிற்கும் திருமண ஒப்பந்தம் செய்ய வந்திருந்த இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். 

விருந்தும் படு அமர்க்களமாக இருந்தது. மண ஒப்பந்த ஆரம்ப நிகழ்ச்சிக்கு களையூட்டியது.

மண விஷயமாக பேச வேண்டியவை பேசி முடிவடைந்துவிட்டன. இரு தரப்பினரும் பூரண சம்மந்தம் தெரிவித்தனர்.

அப்துல்லாஹ் தந்தையின் அன்புக்கும், பாசத்துக்கும், உரியவர். அவருடைய ஒழுக்கமும், நற்குணங்களும் குறைஷிகளின் மத்தியில் பிரபலம்.

அதுபோலவே, ஆமினாவும் குடும்ப விளக்காகவே திகழ்ந்தார். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய நற்பண்புகளை ஒருங்கே பெற்றிருந்தார்.


-- பூக்கும்


Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 8729638389887618543

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress