ஒரு சொல்: 'என்னுடைய பங்கு என்ன?'
https://udayathaaragai.blogspot.com/2013/04/blog-post.html
"நான் இந்தக் கூட்டமைப்பின் ஓர் சிறிய அங்கமாவேன். இந்த அமைப்புக்கு என்னால் ஏதேனும் அளிக்க இயலுமா? அவ்வாறு அளிப்பதில் சிறந்த பொருள் எதுவாக இருக்க முடியும்? - இவ்வாறு எண்ணிப் பார்ப்பது ஓர் ஆக்கப்பூர்வமான சிந்தனைப் போக்காகும்.
இந்த சிந்தனைப் போக்கு மனிதனுள் செயல்படும் தன்மையைத் தோற்றுவிக்கிறது. அந்த ஆற்றல்களுடன் உறுதியான மனமும் ஒன்று சேர்ந்துவிட்டால்... ஒரு சிறந்த செயல்துடிப்புள்ள மனிதன் உருவாகின்றான்.
இத்தகைய மனிதர்கள் ஒருங்கிணைந்து ஒரு வலுவான அமைப்பை உருவாக்குகிறார்கள்.
இவ்வாறு தனக்குத் தானே ஒரு பண்பை வளர்த்துக் கொள்வதே கூட்டமைப்புக்கு தனிப்பட்ட முறையில் அளிக்கக் கூடிய சிறந்த அன்பளிப்பாகும்.
இறைவனின் தீனை மேலோங்கச் செய்யப்படும் முயற்சி உண்மையில் மனிதன் தன்னுடைய
- விவேகத்திற்கும்,
- வீரத்திற்கும்,
- ஆக்கத்திற்கும்,
- ஊக்கத்திற்கும்,
- பயிற்சிக்கும்,
- வளர்ச்சிக்கும்,
மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கிறது.
இன்னும் தெளிவாகக் கூறினால்.. மனிதன் அசத்தியத்துடன் போராடி சத்தியத்தை நிலைநாட்ட முயற்சி செய்யும்போதுதான் இஸ்லாம் மனிதனிடம் தோற்றுவிக்க விரும்பும் உயர்ந்த ஒழுக்கங்கள் உண்டாகின்றன!"
