ஒரு சொல்: 'இடஒதுக்கீடு சாதியை ஒழிக்குமா?'



பல ஆயிரம் ஆண்டுகளாக சாதியின் பெயரால்… மக்கள் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்புகளில் ஒதுக்கப்படுகின்ற ஒரு சமூகத்தில் இட ஒதுக்கீடு தவிர்க்க முடியாதது. அந்த வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கியவர்கள் தமிழர்கள்.

1919-இல், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (பின்னாளில் நீதிக்கட்சி) இடஒதுக்கீட்டுக்காக முதன் முதலாக குரல் எழுப்பியது. 1929-இல், பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் மாநாட்டில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். 1928-இல், முத்தையா முதலியார் அமைச்சராக இருந்தபோது, பத்திரப் பதிவுத்துறையில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது.

இடஒதுக்கீடுகள் சம்பந்தமாக வ.உ.சி இப்படி கூறுகிறார்: “ஒரு குடும்பத்தில் பத்து சகோதரர்கள் இருக்கிறார்கள். இரண்டு பேர் சகலத்தையும் அனுபவிக்கிறார்கள். மீதி இருக்கிற எட்டு பேரும் எனக்கும் தா என்று கேட்டால் இதை அவர்கள் ஒற்றுமைக் குலைவு என்று கூச்சல் போடுகிறார்கள்!” (ஆதாரம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு, பக்.270 – ஆசிரியர்: அருணன்)

நலிவுற்றவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவது இயல்பானது. வீட்டின் சவலைக் குழந்தைக்கு அதிக சத்துணவு.. ஊட்டம் கொடுக்க வேண்டும் ஓர் ஊனமுற்ற குழந்தை என்றால்.. அதற்குதான் முன்னுரிமை. எனவே சமூகத்தில் பன்னூறு ஆண்டுகளாக எல்லாமும் மறுக்கப்பட்டு வந்தவர்களின் வளர்ச்சிக்கு இடஒதுக்கீடு அவசியம்தான்!

கேள்வி இதுதான்: “இடஒதுக்கீடுகள் சாதியை ஒழிக்குமா?”

“இல்லை!” – என்பதுதான் இதற்கான பதில்.

இடஒதுக்கீடு ஒருகாலும் சாதியை ஒழிக்காது. இன்றைய சாதீய அடுக்குக்கு இட ஒதுக்கீடும் ஒரு காரணம் என்று வெளிப்படையாகவே கூறமுடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பில்கூட சாதியை குறிப்பிட வேண்டும் என்பதற்குக் காரணமும் இடஒதுக்கீடுதான்!

இடஒதுக்கீடு இருக்கும்வரை சாதிகள் இருக்கும்.

வேலைக்கு மனு செய்யும்போது, சாதிபெயர் குறிப்பிடத் தேவையில்லை. பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் என்று எழுதினாலே போதுமானது. சாதியப் பெயர் அங்கு வர வாய்ப்பில்லை என்பது அவர்களின் வாதம்.

தாசில்தாரிடம் சென்று, “மிகவும் பிற்படுத்தப்பட்டவர் சான்றிதழ் வேண்டுமய்யா!”- என்றால் “நீங்கள் என்ன சாதி?”- என்றுதான் முதலில் கேட்பார். மீண்டும் சாதியைக் குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். ஆக இடஒதுக்கீடுகள் இருக்கும்வரை சாதியச் சிந்தனையை ஒழிக்க முடியாது. 


ஆனால், இஸ்லாத்தைத் தழுவிய பலர் எங்களுக்கு இடஒதுக்கீடு பற்றிக் கவலையில்லை;இந்தச் சாதி எங்களை விட்டு ஒழிந்தால் போதும் என்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால் எஸ்.டி, எஸ்.சி மக்களுக்குக் கிடைக்கின்ற எல்லா உரிமைகளையும் அவர் இழப்பார். அவர் எஸ்.டி., எஸ்.சி பிரிவிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு வந்துவிடுவார். இதனால், பல உரிமைகளை இழக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இஸ்லாத்தைத் தழுவியவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. "எங்களை விட்டு இந்த இழிவு போனால் போதும்! எங்களுக்கு வேலை வாய்ப்போ, கல்வியோ முக்கியமல்ல!"- என்று துணிந்து முடிவு எடுத்தார்கள். சாதி அவர்களைவிட்டு ஒழிந்தது.  

Related

ஒரு சொல் 7459393558742643228

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress