ஒரு சொல்: ' வியப்பில்லையா இது?'
https://udayathaaragai.blogspot.com/2013/10/blog-post_27.html
உங்களுக்குத் தெரியாத மொழியிலே ஒரு கடிதம் உங்களுக்கு வந்தால்... அந்த மொழி தெரிந்தவர்களிடம் ஓடோடிச் செல்கிறீர்கள். அதிலுள்ள பொருளை நீங்கள் தெரிந்துகொள்ளும்வரை உங்களுக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதாரணக் கடிதங்களைப் பொறுத்த மட்டில் நீங்கள் நடந்து கொள்ளும் முறை இது.
ஆனால், இம்மை - மறுமையின் அனைத்து செல்வங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அனைத்தையம் அறிந்த இறைவனிடமிருந்து உங்களுக்கு வந்திருக்கின்ற கடிதத்தை - திருக்குர்ஆனை - அப்படியே வாசிக்காமல் வைத்து விடுகிறீர்கள். அதிலுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் குறைந்த பட்ச துடிப்புகூட உங்களிடம் இல்லை.
இது உண்மையிலேயே வியப்புக்குரிய விஷயமல்லவா?
- மௌலானா மௌதூதி (ரஹ்)

