ஒரு சொல்: 'வாய்ச்சொல் வீரனில்லை முஸ்லிம்!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post.html
ஒவ்வொரு முஸ்லிமும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், "முஸ்லிம் என்று யாரை விளிக்க வேண்டும்? முஸ்லிம் என்றால் பொருள் என்ன?" - என்பதாகும்.
இஸ்லாம் என்பது இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடப்பது என்று பொருள் அதாவது இறைவனின் கட்டளைகளுக்கு மறுப்பேதும் சொல்லாமல் கீழ்ப்படிவது. தன்னைத் தானே இறைவனிடம் ஒப்படைத்து விடுவதுதான் இஸ்லாம். இறைவனுக்கு முன்னால் தன்னுடைய உரிமைகளையும், சுதந்திரத்தையும் விட்டுவிடுவதுதான் இஸ்லாம். இறைவனின் ஆதிபத்தியத்துக்கும் கட்டளைகளுக்கும் தலை தாழ்த்துவதுதான் இஸ்லாம்.
ஒரு மனிதன் தன்னுடைய செயல்கள் அனைத்தையும் இறைவனின் பொறுப்பில் விட்டுவிட்டால் அவன் ஒரு முஸ்லிம். ஒருவன் தன்னுடைய செயல்களைத் தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டிருந்தாலோ இறைவனைத் தவிர வேறு யாரிடமேனும் அவற்றை ஒப்படைத்துவிட்டாலோ அவன் முஸ்லிமல்லன்.
இறைவனிடம் ஒப்படைப்பது, இறைவனின் பொறுப்பில் விடுவது என்றால், திருக்குர்ஆன் மற்றும் திருநபி மொழிகளையும் அப்படியே எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்வது. வாழ்க்கையில் எந்தப் பிரச்னை குறுக்கிட்டாலும் திருக்குர்ஆனையும், திருநபிமொழிகளையும் அடிப்படையாகக் கொண்டு தீர்வை தேடுவது. இவன்தான் முஸ்லிம். ஏனென்றால், இவன்தான் முழுமையாக இறைவனிடம் தன்னை ஒப்படைத்து விட்டவனாவான். தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பதுதான் முஸ்லிம் என்பதாகும்.
இதற்கு நேர்மாற்றமாக, வேறொரு மனிதனோ, திருக்குர்ஆனையும், திருநபிமொழிகளையும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழவில்லை. மன இச்சைகளின்படி நடக்கிறான். தனது தந்தையார், முப்பாட்டன் காலத்து பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றான். பகுத்தறிவு சொல்வதை எல்லாம் கேட்கின்றான். இந்த நிலையில் இப்படிப்பட்ட மனிதன் தன்னை வெறும் வாயளவில் முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் பொய் சொல்கிறான் என்றுதானே பொருள்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)
- மௌலானா மௌதூதி (ரஹ்)

