ஒரு சொல்:'நரக வடிவமைப்பில் உலகம்!'


கலிமா தய்யிபா எனப்படும் 'நல்ல கலிமா விருட்சம்' செழித்தோங்கினால் அது நல்ல கனிகளைக் காய்த்து குலுங்கும்.  அதன் பின் சுவை மிகுந்த பயன்தரும் பழுத்த கனிகள் உற்பத்தியாகும்.

நல்ல கலிமாவால் உலகத்தில் அமைதியும், சமாதானமும் நிலைக்கும். உண்மையும், நீதியும் உயர்ந்து நிற்கும். அதனால், எல்லா மக்களும் பலனடைவார்கள்.

ஆனால்,  கெட்ட கலிமாவுக்கு எவ்வளவு சத்துக்கள் தருகிறோமோ அந்தளவு முட்கள் நிறைந்த கிளைகளே அதிலிருந்து துளிர்விடும். பிறகு அதிலிருந்து கசப்பான கனிகள் உற்பத்தியாகும். அதன் நார், நரம்புகள் அனைத்தும் கசப்பும், நச்சுத்தன்மையும் உள்ளவையாகவே இருக்கும். 

இன்றைய உலகில் உங்கள் கண்களாலேயே இதை நீங்கள் காணலாம். 

இறைமறுப்பும், இணைவைப்பும், நாத்திகமும் எங்கெல்லாம் பரந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறதோ அங்கெல்லாம் மனிதன் சக மனிதனை கிழித்து குதறிக் கொண்டிருப்பதை காணலாம். 

ஒரு நாடு சக நாட்டை அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் முழு வீச்சில் இறங்கிவிட்டுள்ளது. இராசாயன நச்சு ஆயுதங்கள் ஆயிரமாயிரம் டன்களாய் குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகம் ஒரு நரகம் போன்ற சூழலில் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அழித்து விடுவதற்கு தயாராக இருக்கிது. வலியவன், மெலியவனை அடக்கியாளத் துடிக்கின்றான்; அடிமைப்படுத்த முனைகின்றான். அவனது அடிப்படை உணவுப் பங்கையும் பறித்து தான் உண்ண தயங்காத மனோநிலை பெருகிவிட்டுள்ளது. 

காவல்துறை, இராணுவம், சிறைச்சாலை, தூக்குமேடை ஆகியவற்றின் வலிமைகள் முன்பாக வலியவனின் அட்டூழியங்களை சகித்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் மெலியவன் நிறுத்தப்பட்டுள்ளான். 

இந்த கொடுமைகள் ஒருபுறமிருக்க..

இவர்களின் அந்தரங்க வாழ்வோ மிகவும் கேடு கெட்ட தனமாக, ஷைத்தான்கூட வெட்கப்படும்விதமாக ஒழுக்கம் சீர்கெட்டுவிட்டுள்ளது. மிருகங்கள்கூட செய்யத் துணியாத அசிங்கங்களை மனிதன் செய்ய துணிந்து விட்டுள்ளான். 

'தாய்மை'  தான் ஈன்றெடுத்த குழந்தைககளை வாழ்வின் இடையூறாக கருதி தம் கைகளாலேயே கொல்லும் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. 

ஒழுக்கத்தின் சீர்கேட்டை எடுத்துக் கொண்டால்..  கட்டிய கணவனே மனைவியை அடுத்தவனுடன் அனுப்பிவிடுகின்றான். பிறர் மனைவிமார்களுடன் இவன் சுற்றித் திரிகின்றான். நிர்வாண கழகங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்குகள் போல ஆணும், பெண்ணும் நிர்வாணமாய் சுற்றித் திரிகிறார்கள். வெட்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் சற்றும் இடமில்லாமல் போனது.

தன்னலம் மிகைத்துப் போனது. பணக்காரர்கள் வட்டியின் வாயிலாக ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். செல்வந்தர்களுக்காகவே படைக்கப்பட்ட அடிமைகள் போல ஏழை எளியோர் நடத்தப்படுகிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், கெட்ட கலிமாவிலிருந்து முளைக்கும் செடி எங்கு வளர்ந்தாலும் அதன் வளர்ச்சியின் விளைவுகள் குத்தித் துளைக்கும் கூர் முட்களுடன் சமூகத்துக்கு தீமை விளைவிப்பதாகவே இருக்கின்றன. அதிலிருந்து விளையும் கனிகளும், சமூத்துக்கு நாசம் விளைவிக்கும் நச்சுக் கனிகளாகவே இருக்கின்றன.

- மௌலானா மௌதூதி (ரஹ்)

Related

ஒரு சொல் 7932976722000749349

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress