பொன்னேடுகள்: 'மறவா நினைவுகள்'

Zainab al Ghazali al Jubaili (or Zainab Ghazali) was born in 1917 . She died in 2005 at age of 88
என் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான செய்திகளை பதிவு செய்ய வேண்டும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனாலும், இது அவ்வளவு முக்கியமானதாக  எனக்குப்படுவதில்லை.  ஏனென்றால், 'எனது நினைப்பு நிறைவேறுமா?' - என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது.

இந்நிலையில், இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் இதன் அவசியத்தை எனக்கு உணர்த்தியப் போதுதான் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது.  இஸ்லாமிய இயக்கங்கள், கிழக்கிலும். மேற்கிலும் நாத்திக சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தன. அந்தப்  போராட்டங்களுக்குச் சான்றாக இதை ஒரு மார்க்கக் கடமையாகவே எண்ணி இந்த சோகமான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய முன்வந்தேன்.

ஈவு, இரக்கமற்ற முரட்டுத்தனமான அந்த நாத்திக சக்திகள் சத்தியத்தைத் தடுப்பதற்கு முயன்றுக் கொண்டிருந்தன என்பது மட்டுமல்லாமல் சத்தியத்தைப் பாதுகாக்க உழைத்த அத்தனைப் பேரையும் துன்புறுத்தி, இன்பம் காண்பதில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையிலும், துணிவு மிக்க சத்தியத்தின் காவலர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இவ்வாறு பிரகடனம் செய்தார்கள்: "திருக்குர்ஆனும், திருநபிகளாரின் வழிமுறைகளும் நாட்டில் முடக்கப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் நாட்டில் செயலுருவம் பெற வேண்டும்!"

ஓர் இறைக் கொள்கையின் வெளிப்பாடான, இறையச்சத்தின் உயரிய மதிப்பீடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். காரிருளில் மூழ்கியிருக்கின்ற ஒரு சமூகத்தை தட்டியெழுப்புவதற்காக முஸ்லிம்கள் தமது அனைத்துச் சக்திகளையும் ஒன்றுத் திரட்ட வேண்டும். அதை இஸ்லாமிய பணியில் ஒருங்கிணைக்க வேண்டும். இந்தப் பணியின் முயற்சியே ஒருவன் இறைவனின் பக்கம் நெருங்குவதை ஊக்குவித்து, தவறான பாதைகளின் பக்கம் அழைத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்தும். அவனுடைய எல்லா தவறான பழக்க வழக்கங்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு கட்டிவிடும். 

மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக நாத்திக சக்திகள் அவர்களை தவறான பதையில் இழுத்துச் செல்கிறார்கள். ஒருவன் சத்தியப் பாதையில் இலட்சியப் பயணம் மேற்கொள்ளும்போதுதான் நபிகளாரின் கொள்கைகளை நிலைநிறுத்த முடியும். இஸ்லாமிய இயக்கத்தைக் கட்டிக் காப்பதில்தான் உலக மக்களின் உண்மையான வெற்றி உள்ளது.

இருட்டுச் சிறைக்கூடங்களும், ஈவு, இரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளும், கசையடிகளும் இஸ்லாமிய பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின் மனஉறுதிக்கு  எப்போதும் உந்து சக்தியாகவே இருந்து வந்துள்ளன.

- ஜைனப் அல்கஸ்ஸாலி

Related

பொன்னேடுகள் 8451262933996234983

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress