முன்மாதிரி முஸ்லிம் அவள்!
https://udayathaaragai.blogspot.com/2012/12/blog-post_4.html
முழுவதும் உடல் மறைத்து
முகம் மட்டும் வெளிபடும்!
முழு நிலவு அவள்..
முன்மாதிரி முஸ்லிம் அவள்!
அதிகாலை தொழுகையுடன்
அவள் பணி தொடங்கிடுவாள்
அருள்மறையாம் திருமறையினை
அனுதினமும் ஏற்றிடுவாள்
ஏக இறைவனை எதிலும் புகழ்ந்திடுவாள்
எல்லோருக்கும் எடுத்துக்காட்டு அவள்
முன்மாதிரி முஸ்லிம் அவள்!
தாயுக்கோர் மகளாய்..
தன்னிலையுணர்ந்து
தாய்மையை மதிக்கும் அவள்..
மாமியாரை மறுதாயாய்...
மனதார ஏற்று மகிழ்விப்பாள்..
மாசற்ற மங்கை அவள்
முன் மாதிரி முஸ்லிம் அவள்!
கணவனுக்கு கண் குளிர்ச்சியாய்...
கடமையாற்றுவாள்..
கற்பை பேணி கண்ணியம் காப்பாள்..
கணவனின் உறவுகளை..
கட்டிக்காப்பாள்...
கட்டியவன் மனதில் உயர்ந்து நிற்பாள்..
களங்கமற்ற நங்கை அவள்..
முன்மாதிரி முஸ்லிம் அவள்!
கருவினில் சுமந்த பிள்ளைக்கு
கல்பினில் இறைவனைச் சுமக்க..
கற்றுத் தந்திடுவாள்..
கண்மணி நாயகம்.. உன் முன்மாதிரி..
கனவு காணு சுவனத்திற்கு என்று
கருத்தாய் கூறி வளர்த்திடுவாள்..
கண்ணியமிகு தாய் அவள்..
முன்மாதிரி முஸ்லிம் அவள்!
அண்டை வீட்டாருக்கு
அணுசரனையானவள்..
சமூக மக்களுக்கோ..
சான்றாய் நிற்பவள்..
மார்க்கத்தை மக்களுக்கு கற்பிப்பாள்..
மறுமலர்ச்சிக்கு வித்திடுவாள்..
மனதினிலே ஏகனை சுமப்பவள்..
மறுமலர்ச்சிக்கு நல்வழிகாட்டிடுவாள்..!
மார்க்கம் போற்றும் மங்கை அவள்..
முன்மாதிரி முஸ்லிம் அவள்!
சுவனமே அவள் இலக்கு..
சோபனம் சொல்லுங்கள் அவளுக்கு..
சுவனத்து மங்கை அவளின்
சுவடுகளைப் பின்பற்றுங்கள்..
ஏனெனில்.. முன்மாதிரி முஸ்லிம் அவள்!
- சகோதரி : இப்ராஹீமா, சென்னை.


