ஒரு சொல்:'மகத்தானவனின் மீதான நம்பிக்கையின் விளைவுகள்!'


இறைவனின் மகா சக்தி மீது நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு, பிற சக்திகள் அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்துவிடுகிறீர்கள். விண்ணகத்துக் கருவூலங்களுக்கெல்லாம் சொந்தக்காரனான அந்த இறைவனின் மகத்தான ஆற்றல் மீது நம்பிக்கை வைத்தவராவீர்கள். 

மொத்தத்தில் இந்த அடிப்படையில் நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், 'கலிமா தய்யிபா'வை ஒப்புக் கொண்டு அதற்குத் தகுந்தவாறு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மனிதனுக்கு விண்ணின், மண்ணின் எல்லா சக்திகளும் துணை நிற்கும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். அப்படி நம்பிக்கைக் கொண்டோரின் நம்பிக்கையின் விளைவுகள் இம்மை முதல் மறுமைவரை வளர்ச்சியுற்றவாறு இருக்கும். ஒரே ஒரு வினாடி தோல்வியும், ஏமாற்றமும்கூட அவனை அண்டுவதில்லை. 

இதைதான் இறைவன் இப்படி உவமையோடு கூறுகின்றான்: 

"கலிமா தய்யிபா, ஒரு விருட்சம் போன்றது. அதன் கிளைகள் விண்ணில் பரவியிருக்கின்றன. எல்லா நேரத்திலும் அது தனது இறைவனின் கட்டளைப்படி கனி கொடுத்துக் கொண்டிருக்கிறது!"

- மௌலானா மௌதூதி (ரஹ்)


Related

ஒரு சொல் 6999086922189051730

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress