அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 40: 'யாராக இருந்தால்... என்ன?'

அண்டை வீட்டாருடன் இணக்கமாக வாழுங்கள்; அவர்கள் யாராக இருந்தாலும் சரியே! யதார்த்தமான நல்லுரையை நபிகளார் அறிவுறுத்தியுள்ளார்கள். அதை தடம் பிசகாமல் பின்பற்றியுள்ளார்கள் நபித்தோழர்கள். 

இதோ இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்.. 



 நபித்தோழர் அப்துல்லாஹ்வின் அண்டை வீட்டில் ஒரு யூதர் வசித்து வந்தார். 

ஒருநாள் நபித்தோழர் வெளியே சென்றிருந்தார். 

மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டில் இறைச்சி சமைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். 

"இறைச்சியை நம் அண்டை வீட்டாருக்கும் கொடுத்தீர்களா?"- என்று விசாரித்தார். 

"அவர் யூதராயிற்றே! அவருக்கு எதற்காகக் கொடுக்க வேண்டும்?""- என்றனர் வீட்டார். 

"யூதராக இருந்தால் என்ன? அவர் நமது அண்டை வீட்டுக்காரராயிற்றே! "உங்கள் அண்டை வீட்டாருடன் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் முஸ்லிமாக இருந்தாலும்.. இல்லாவிட்டாலும்..!" - என இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) வற்புறுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்களா?"- என்று நபித்தோழர் அப்துல்லாஹ் (ரலி) தம் வீட்டாருக்கு அறிவுறுத்தினார்.

-- இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 5674331452224510362

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress