பாலை மலர்:12, 'அருள் மழைப் பொழிந்ததம்மா.. அகிலத்தார்க்கு'



'மக்கா-மஃஸீமாவிலிருந்து' சற்றுத் தள்ளி ஒரு குடியிருப்பு இருந்தது. அதன் பெயர் 'மல்அல்ஸஹாரா' என்பதாகும். அங்கு "அய்ஸ்" என்ற பெயரில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். மக்கள் செல்வாக்கு பெற்றவர் அவர். மக்கள் அவரை மதிப்பு, மரியாதையுடன் போற்றி வந்தனர்.

அப்துல் முத்தலிப் அந்தத் துறவியை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெற்று வந்தார். 

அன்று பேரன் பிறந்த செய்தியை சொல்ல அப்துல் முத்தலிப் மகிழ்ச்சியுடன் துறவியைக் காணச் சென்றார். அந்தச் சமயத்தில் துறவி தியானத்தில் ஈடுபட்டிருந்தார். 

அப்துல் முத்தலிப் காத்திருந்தார்.

சற்று நேரத்தில் தியானம் கலைந்து எழுந்த துறவி, "வாருங்கள் அப்துல் முத்தலிப்! மகிழ்ச்சி பொங்க காணப்படுகின்றீரே என்ன செய்தி?" - என்று சிரித்தபடியே கேட்டார்.

"உண்மையாகவே நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியைத்தான் தங்களிடம் கொண்டுவந்துள்ளேனய்யா!" - என்றார் அப்துல் முத்தலிப்.

"சொல்லுங்கள்.. சொல்லுங்கள்.. அப்துல் முத்தலிப்! அளவில்லாத மகிழ்ச்சியால் உங்கள் வயதுகூட குறைந்துவிட்டது போல தெரிகிறது. ம்.. என்ன செய்தி என்பதை சொல்லுங்கள்!" - துறவி சிரித்தவாறே கேட்டார். 

"இன்று காலை அப்துல்லாஹ்வுக்கு ஓர் அழகிய குழந்தை பிறந்தது. மக்கா நகரிலேயே அழகான குழந்தை! மக்களின் பாராட்டு மழையில் நனைந்து நான் தவித்து விட்டேன் போங்கள்!" - என்றார் அப்துல் முத்தலிப் மகிழ்ச்சி பொங்க.

"குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினீர் அப்துல் முத்தலிப்?"

"முஹம்மது!"

"என்ன முஹம்மதா?"

புருவங்களைச் சுருக்கி சிந்தனை வயப்பட்ட துறவி புன்முறுவலுடன் தொடர்ந்தார்: "இப்போது உண்மையிலேயே நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தாக வேண்டும்!"

"ஓ..! அப்துல் முத்தலிப்! கவனமாக கேளுங்கள்: இதுநாள் வரை யாருடைய வருகையைக் குறித்து நான் உங்களிடம் அடிக்கடி கூறிவந்தேனோ.. அதே குழந்தைதான் இது!

நன்றாக கேளுங்கள். குழந்தைக்கு மூன்று அடையாளங்கள் இருக்கும். 

குழந்தை பிறந்ததும் அடிவானத்தில் ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியிருக்கும்! 

குழந்தை பிறந்த நாள் திங்கட்கிழமையாக இருக்கும்! 

மூன்றாவது குழந்தைக்கு முஹம்மத் என்று பெயர் சூட்டப்படும்!

உங்கள் அதிஷ்டத்தை எண்ணி பெருமைப்படுங்கள் அப்துல் முத்தலிப்! நிச்சயமாக பெருமைப்படுங்கள். பனு ஹாஷிம் குலத்தாரின் மேன்மையை இனி பார்க்கத்தான் போகிறீர்; நீங்கள் அப்போது உயிருடன் இருந்தால்!"

- பூக்கும்.

                         


Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 729736820481861540

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress