அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 36: 'இறைவனுக்குப் பிடித்தமான குணங்கள்'

எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத சகிப்புத்தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. இவை இறைவனுக்குப் பிடித்தமானவை என்கிறார்கள் அன்பு நபி. 

இதோ..! இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்...


 ஒருமுறை.

தூதுக்குழு ஒன்று மதீனா வந்தது. 

நீண்ட பயணம்  செய்து அவர்கள் வந்திருந்தார்கள். 

உடலெங்கும் அழுக்கும், புழுதியும் கப்பியிருந்தது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கக வேண்டும் என்ற பேராவலில் குழுவினர் இருந்தனர். அதனால், வாகனங்களிலிருந்து இறங்கியதும் அண்ணலாரைச் சந்திக்க விரைந்து சென்றார்கள். அவர்கள் குளிக்கவுமில்லை; குறைந்தபட்சம் கை, கால், முகம் கழுவி உடலை தூய்மைப்படுத்திக் கொள்ளவுமில்லை. 

ஆனால், தூதுக்குழுவின் தலைவரோ, சந்திப்பில் அவரசம் காட்டவில்லை. 

வாகனத்திலிருந்து பதற்றமில்லாமல் இறங்கினார். பயணச் சுமைகளை ஒழுங்குப்படுத்தி ஓரிடத்தில் அடுக்கி வைத்தார். ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி தீவனம் அளித்தார். 

பிறகு, குளித்து முடித்துப் புத்தாடை அணிந்தார். கம்பீரமாய் அண்ணலாரின் அவையை அடைந்தார்.


 குழுத்தலைவரைக் கண்டதும் வரவேற்று உபசரித்து நபிகளார் சொன்னார்கள்: 

 "அப்துல் கைஸ் குலத்தலைவரே, வருக..! வருக..!! இறைவனுக்குப் பிடித்தமான குணங்கள் உம்மிடம் உள்ளன. சகிப்புத் தன்மையும், கம்பீரமான நிதானமும்தான் அவை!"

-  இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 9002314655083701195

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress